கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 140 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 140 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் குணப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 4282 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 9791 ஆகவும், 5490 நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது