மகிழடித்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும் கொரன தொற்று மட்டு எண்ணிக்கை 32.

  வேதாந்தி

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மகிழடித்தீவு  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மாவடிமுன்மாரியைச்சேர்ந்த நபர் ஒருவர் கொரனா தொற்றுக்கு  உள்ளாகி உள்ளார்.

தொற்றுக்குள்ளானவர் 42வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கொழும்புக்கு சென்று வந்தவர் எனவும் கொழும்பிலோ அல்லது போக்குவரத்திலோ தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காய்ச்சல் காரணமாக குறிப்பிட்ட நபர்  வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தபோது இவரிடம்
நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் முடிவில் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டுமாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
படுவான்கரை நிலப்பரப்பில் தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் இவராகும்.
நேற்று அதிகாலை  வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பட்டாரபுரத்தைச்சேர்ந்த ஒருவர் தொற்றுக்குள்ளானமையும் குறிப்பிடத்தக்கதாகும்.