இலங்கை இராணுவத்தளபதியின் பயணத்தடை அமெரிக்காவின் சட்ட செயல்முறை.பாம்பியோ

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் ஆர். பாம்பியோ, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது  குடும்பத்தினருக்கு தனது அரசாங்கம் விதித்த பயணத் தடை அமெரிக்காவில் ஒரு சட்ட செயல்முறை என்று தெரிவித்துள்ளார் .

இன்று காலை வெளியுறவு மந்திரி தினேஷ் குணவர்தனவுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க உயர் அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.

பயணத் தடையை அமெரிக்க அரசு தொடர்ந்து பரிசீலிக்கும் என்று பாம்பியோ மேலும் கூறினார்.
“நாங்கள் அதை (தகவல்) தொழில்நுட்ப ரீதியாகவும், உண்மையாகவும், சட்டரீதியாகவும் பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம் ”, என்றார்.