வாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்தமா?

மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு பலமடங்காக அதிகரித்துள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக்காரணம் வாழைச்சேனை பிரதேசசபையின் அசமந்தப்போக்கே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சென்ற ஆண்டு 80பேர் பதிவு செய்யப்பட்ட வாழைச்சேனை சுகாதாரப்பிரிவில் இவ்வாண்டு 301 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். குறிப்பிட்டவாரத்தில் மட்டும் 13நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
கடந்தமாத தரவுகளின்படி வாழைச்சேனை வைத்தியபிரிவு இரண்டாம் இடத்திலும் ஓட்டமாவடி  முதலாவது நிலையிலும் மட்டுமாவட்டத்தில் உள்ளமையும் சுட்டித்தக்கதாகும்.
வாழைச்சேனை பிரதேசசபையினர் குறிப்பிட்டகாலப்பகுதியில் கழிவுகளை அகற்றாமை சுகாதாரப்பிரிவினருடன் ஒத்துழைக்காமை போன்ற பல்வேறு காரணங்களே வாழைச்சேனை கண்ணகிபுரம் போன்ற பிரதேசங்களில் தொற்று ஏற்படக்காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது