அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரும் இராஜதந்திர தூதுக்குழுவை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரும் இராஜதந்திர தூதுக்குழுவை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர் டாக்டர் சுதத் சமரவீரா தெரிவித்தார்.

இந்த குழு நாட்டில் 24 மணிநேரம் மட்டுமேநாட்டில் தங்கியிருக்கின்றனர் எனவும்   ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே இவர்கள் சந்திக்கிறார்கள், எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை என்றும் அவர்  தெரிவித்தார்..

அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு  சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்கள் வந்த பிறகும் சுகாதார சேவைகள் தொடர்ந்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.