மட்டக்களப்பில் 28வது கொரனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது.தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை 28என தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பகுதியில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட கோரோனா தொற்றாளர் பத்தரமுல்லையில் உள்ள ஒரு மீன் வியாபார நிலையத்தில் கடமையாற்றியுள்ளார்

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னதாக இலங்கை போக்குவரத்து பேருந்தில் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையில் இறங்கியுள்ளார்.

இவருடைய தகவல் அடிப்படையில் குறித்த பேருந்தில் பிரயாணம் செய்தவர்களது தகவல் திரட்டப்பட்டு வருவதாக PD .Dr லதாகரன் தெரிவித்துள்ளார்

இதேவேளை தாழங்குடா கல்வியல்கல்லூரியில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த  மீன்சந்தையுடன் தொடர்புபட்டதென்னிலங்கை வாசிகள் 21பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.