இன்று கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் வித்தியாரம்பம்.

(காரைதீவு நிருபர் சகா)
இந்துக்களின் சமயச்சடங்காகிய ஏடுதொடக்கல் வித்தியாரம்ப விழா இன்று(26) திங்கட்கிழமை தசமிகூடியவேளையில் பரவலாக நடைபெற்றது.
காரைதீவு  கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் வித்தியாரம்ப விழாவை நடாத்திவைத்தார்.

பெற்றோர்கள் சுகாதாரவிதிப்படி மாஸ்க் அணிந்து பிள்ளைகளைக் கொணர்ந்து இவ்விழாவில் பங்கேற்றார்கள்.

காலைப்பூஜை நிறைவுற்றதும் சுமார் 100 குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்துவைக்கப்பட்டது.