கொரனா நடவடிக்கை ஏறாவூரில் பல்வேறு தீர்மானங்கள்

(ஏறாவூர் நிருபர் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில்                      கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதையடுத்து           ஏறாவூர்ப் பிரதேசத்தில் பொதுமக்களது நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தல் செய்யவும் சுகாதார விதிமுறைகளை மீறுவோருக்கெதிராக சட்டநடவடிக்கைகளை கடுமையாக அமுல்படுத்தவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபை மண்டபத்தில்  25.10.2020 நடைபெற்ற                உயர்மட்ட மாநாட்டில் இத்தீர்மானங்கள்  எடுக்கப்பட்டுள்ளன
சபை முதல்வர்  ஐ. அப்துல் வாசித் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் ,        பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம்,                  வர்த்தகர் சங்கத்தலைவர் இசட் ஏ. ஹினாயதுல்லா,             பள்ளிவாயல்கள் முஸ்லிம்கள் நிறுவனங்களின் சம்மேளனம்,          சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும்  பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான               பல்வேறு விழிப்புணர்வுச் செயல் திட்டம் குறித்தும்                 இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறிப்பாக பொதுமக்கள் கூடுகின்ற பொதுச்சந்தைகள்,             வணக்க ஸ்தலங்கள், மரணவீடுகள், வர்த்தக நிலையங்கள் போன்ற  இடங்களில்; ஒழுங்குபடுத்தல் மேற்கொள்வதெனவும்                உணவகங்களில் கட்டுப்பாட்டினை விதிப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டது.
தேவையான சமயங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன், மரக்கறி, பழங்கள் போன்றவற்றைக் கொள்வனவு செய்வதற்கு  நடமாடும் வர்த்தகர்களை நாடுமாறு                         பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
  1. விசேடமாக சமூக வலைதள பதிவாளர்கள்                         சமூக பொறுப்புடன் செயல்படுமாறு நகர சபை முதல்வர்          அப்துல் வாசித்  இங்கு வேண்டுகோள் விடுத்தார்.