கண்டியில் கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள்தூள் கல்முனை காத்தான்குடி பகுதிகளில் விற்பனை.

அழுக்கு மஞ்சளுடன் வெள்ளை அரிசியை  சேர்த்து  அரைத்து விற்பனை செய்த நபரை கண்டி பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

மாவரைக்கும் ஆலையொன்றிலேயே இவ் மஞ்சள் அரைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட கலப்பட மஞ்சள் தம்புள்ள , கல்முனை கடைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும். கேகாலை மாவனெல்ல மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களில் உள்ள கடைகளில்  இந்த கலப்பட மஞ்சளை கண்டுபிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தவுலகலா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் அபேவர்தன தெரிவித்தார்.

குறிப்பிட்டஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது