மட்டக்களப்பில் பிரபல வைத்தியநிபுணர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்? காரணம் என்ன

மட்டக்களப்பு ஓட்டமாவடிப்பிரதேசத்தில் கொரனாதொற்றுக்குள்ளானவர் மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபலதனியார்  வைத்தியசாலையொன்றில்  தனது சுகயினம் காரணமாக வைத்தியநிபுணருடன் ஆலோசனை பெற்று மருந்துவகைகளை பெற்றுச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்டவைத்தியசாலையில் இவர் நீண்டநேரம் காத்திருந்தே வைத்தியநிபுணரை சந்தித்துள்ளதாகவும் . அக்குறிப்பிட்ட நேரத்தில் பலபேர் சிகிச்சைபெற குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு வந்துசென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் வைத்தியசாலை ஊழியர்களோ அங்கு வந்து சென்ற நோயாளிகளோ இதுவரை தனிமைப்படுத்தபடவில்லையெனவும் குறிப்பிட்டவைத்தியநிபுணர் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.