கல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……

கல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……

யு.எல்.அலி ஜமாயில்

அன்பின் பொதுமக்களுக்கு , முக்கிய அறிவித்தல் நாட்டில் பரவுகின்ற COVID – 19 எனும் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்கள் எமது பிராந்தியத்திலும் இனங்காணப்பட்டுள்ளதால் , அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக எமது பிராந்திய சுகாதார திணைக்களம் , பிரதேச செயலாளர் , மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோரின் பின்வரும் அறிவுறுத்தல்களை அவசியம் நடைமுறைப்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றார்கள் . – எமது பிராந்தியத்தில் தற்காலிகமாக ஜும்ஆ மற்றும் ஜவேளைத் தொழுகை உட்பட அனைத்து ஒன்று கூடல்களையும் மஸ்ஜித் மற்றும் பொது இடங்களில் தவிர்ந்துகொள்ளல் . ( இன்று அஸர் தொழுகையுடன் பள்ளிவாசல்கள் யாவும் மூடப்பட்டுள்ளதோடு மறு அறிவித்தல் வரை அனைவரும் வீடுகளில் தொழுது கொள்ளவும் ) – பொருட்களை கொள்வனவு செய்யும்போது இருவருக்கிடையில் குறைந்தது 1 மீற்றர் இடைவெளி விட்டு நிற்றல் . – பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் வெளிச்செல்லல் . > வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகமூடி ( மாஸ்க் ) அணிந்திருத்தல் . – அவசியத் தேவையின்றி வெளியே செல்லாமல் வீடுகளில் தங்கியிருத்தல் . – கடற்கரை ஓரங்களில் ஒன்று கூடி நிற்றல் , கூட்டமாக பயணம் செய்தல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளல் . மேற்படி அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் . வஸ்ஸலாம் . இவ்வண்ணம் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலின் படி , அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் .கல்முனை