மட்டக்களப்பு சந்திவெளியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

(கனகராசா சரவணன்)
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் கொண்டு சென்ற ரயிலில் மட்டக்களப்பு சந்திவெளியில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (24) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

சந்திவெளி வைத்தியசாலை வீதி கடற்கரை பகுதியைச் சோர்ந் 53 தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு எரிபொருள் ஏற்றிச் கொண்டு சென்ற ரயிலில் சந்திவெளி பகுதியில் காலை 4.50 மணியளவில் மோதி உயிரிழந்துள்ளார் இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கோண்டுவருகின்றனர்