கொரோனா நடைமுறைக்கமைய கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் ஏற்பு

பாறுக் ஷிஹான்

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  சுகாதார விதிக்கமைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு  தற்போது இயங்குவதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய இணைப்பாளர்  இஸ்ஸதீன் லத்தீப்  தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் மீண்டும்  பீடித்துள்ள நிலையில்  அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு    கடந்த தினங்களில்  அரசு அறிவித்திருந்தது.

மேலும்  பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கை இலகுபடுத்துவதற்காக புதிய தொலைநகல் 0672229728 எனும்  இலக்கத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு   மகஜர்களை முடியும் என  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.