இன்று முதல் பல இன்டர்சிட்டி ரயில்களை நிறுத்த முடிவு

பயணிகளின் தேவை குறைவாக இருப்பதால் இன்று முதல் (21) பல இன்டர்சிட்டி ரயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கண்காணிப்பாளர் ரஞ்சித் பத்மலால் தெரிவித்தார். நாட்டில் கொரோனா ஆபத்து இருப்பதால் இன்டர்சிட்டி ரயில்களில் தினமும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

“அலுவலக ரயில்களில் மக்கள் இருந்தாலும், குறுகிய, தூர இன்டர்சிட்டி ரயில்களைப் பயன்படுத்துபவர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளது.

பொலன்னருவ இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெலியட்டா சதர்ன் எக்ஸ்பிரஸ், காங்கேசந்துறை காலை 5.45 மற்றும் 11.50 மற்றும் கண்டி காலை மற்றும் மாலை எக்ஸ்பிரஸ் புகையிரதங்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே இருக்கைகளை முன்பதிவு செய்யப்படுகின்ற நிலையில். கடந்த மாதம், வார இறுதி நாட்களில் தவிர ஒவ்வொரு ரயிலுக்கும் 10 க்கும் குறைவான இடங்களே பதிவு செய்யப்பட்டன.. எனவே, வார இறுதி நாட்களில் கண்டி மற்றும் காங்கேசந்துரைக்கு இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.. ”