அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கிளினிக் தொடர்பான அறிவித்தல்

றிஸ்வான் சாலிஹூ)
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 இரண்டாம் அலைத் தொற்று காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான தபால் மூலம் மருந்து வழங்கும் சேவை நாளை செவ்வாய்க்கிழமை (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என வைத்தியசாலையின், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00மணி வரை, 0672052068 , 0771981879 போன்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் மருந்து பொதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.