தளவாய் கடற்கரைப் பகுதியில் வாழும் மீனவர்களுக்கு அச்சுறுத்தல்.

மட்டக்களப்பு தளவாய் கடற்கரைப் பகுதியில் 40-50 வருடங்களாக வாடி அமைத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் மீனவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை பௌத்ததுறவியொருவர் ஆரம்பித்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கவனத்திற்கு  கொண்டுசென்றுள்ளதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

 இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது

 சனிக்கிழமை திபுலாகலையைச் சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் அங்கு வருகை தந்ததாகவும் அவர் அங்கு பரம்பரை பரம்பரையாக வாடி அமைத்து தொழில் செய்து வருபவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கூறியதாகவும் அறிய முடிகிறது.

இதுவிடயமாக ஆராய அங்கு சென்றபாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேசவிகாராதிபதியுடன் கலந்துரையாடியதுடன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.