கொரனா தொற்று விழிப்புணர்வு, வீதியில் இறங்கிய அரச உத்தியோகத்தர்கள்.

கொரனா தொற்று விழிப்புணர்விற்காக வீதிகளில் இறங்கி அரசாங்க உத்தியோகத்தர்கள் செயற்பட்ட சம்பவம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இடம்பெற்றது.

அதிகரிக்கும் கொடிய கொரனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக மக்கள் இருக்கும் வகையிலும், அவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்கவும், கடந்த 12.10.2020 அன்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரமேஸ், கொக்கட்டிச்சோலை பிரதேச சபை செயலாளர், காவல்துறை உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வினை தொடர்ந்து 13.10.2020 அன்று கொக்கட்டிச்சோலை பிரதான வீதிக்கு அனைத்து உத்தியோகத்தர்களும் சென்று அங்குள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் பொது மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்ப்பது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது, போன்ற பல செயற்பாடுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் முககவசம் அணிவதனையும் கட்டாயமாக்கினர்.

அத்துடன் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் மீது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.