மட்டுபோதனாவைத்தியசாலையின் பிரசவ அறை தாதி உத்தியோகத்தருக்கு கொரனா.வீட்டில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேதாந்தி

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் மகப்பேற்றுவிடுதியின் பிரசவ அறையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பிட்டபிரிவில் பணியாற்றும்  கம்பகாமாவட்டத்தைச்சேர்ந்த தாதியொருவருக்கு கொரனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டமையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாதி 03ம்திகதிவிடுமுறைபெற்று கம்பகாவுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டதாதிக்கு 12ம்திகதி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் குறிப்பிட்டதாதியருடன் கடமையாற்றியவர்கள், தாதிதங்கியிருந்த வீட்டாரிடமும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனைமுடிவுகள் நாளைவெளிவரும் எனவும் அதன்பிறகுதான் அடுத்தகட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வைத்தியசாலைஉயர்அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை குறிப்பிட்ட தாதி உத்தியோகத்தர் தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.