கல்முனையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை சுமுகமாக நடைபெற்றது.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)       

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (11.10.2020) சுமுகமாக நடைபெற்றன.

கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரிக்கு மாணவர்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய முகக்கவசம் அணிந்து கொண்டு பரீட்சைக்கு வருகைதந்தனர். பரீட்சை மேற்பார்வை உத்தியோகத்தர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினார்கள். பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை மருதமுனை அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலை மாணவர்கள் தரம் 05 புலமப்பரிசில் பரீட்சை எழுதுவதற்காக மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ. மஹ்றூப் தலைமையில் மாணவர்கள் வழியனுப்பப்பட்டார்கள். பொதுச்சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கமைய மாணவர்கள் சவர்காரமிட்டு கைகளை கழுவிக்கொண்டு பரீட்சை மண்டபத்திற்கு சென்றனர்

கல்வியமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழல் சுத்தப்படுத்தப்பட்டு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பரீட்சைக்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.