கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் கிழக்கில் அமைதியான முறையில் 5ம்ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள்

கனகராசா சரவணன்–  ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 05 ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 9748  மாணாவர்கள்  இன்று ஞாயிற்றுக்கிழமை (11) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொரோனோ தொற்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோற்றியுள்ளனா.;

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்  காரணமாக   தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை  தோற்றவுள்ள மாணவர்களின்  பாதுகாப்பு நலன் கருதி  கல்வி  மற்றும் சுகாதார  அமைச்சின் பணிப்புரைக்கு   அமைய  சுகாதார நடைமுறையின் கீழ் பரீட்சை நிலையங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள்   முன்னெடுக்கப்பட்டு பரீட்சை நடைபெறுகின்றது
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி , கல்குடா , பட்டிருப்பு , மண்முனை மேற்கு  ஆகிய  05   வலயங்களில்  103   பரீட்சை நிலையங்களிலும்  13 இணைப்பு பரீட்சை நிலையங்களில் 9748  மாணாவர்கள்   பரீட்சைக்கு  தோற்றுகின்றனர்
இன்று பரீட்சைக்கு தோற்ற பரீட்சை நிலையங்களுக்கு சுகாதார வழிமுறைகளான முகக்கவசம் அணியாது வந்த மாணவர்களின் பெற்றேர்களை பொலிசார் திருப்பி அனுப்பி முகக்கவசம் எடுத்துவரப்பட்டு மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அனுமதிகப்பட்டனர்.
இதேவேளை சுகாதார வைத்திய அதிகாரிகளின்  சுகாதார பாதுகாப்பு  நடைமுறையின்  கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் 2, 936   பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள்  தோற்றுகின்றனர் குறிப்பிடத்தக்கது .