தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ.இராசமாணிக்கத்தின் 46வது நினைவு தினம்.

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான சி.மூ.இராசமாணிக்கத்தின் 46வது நினைவு தினம் இன்று (07.10.2020) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் இல்லத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது.

சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்துடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
 செட்டிபாளையம் திலகவதியார் மகளிர் இல்ல மாணவியருக்கு ஒருவேளைக்கான உணவும் வழகப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கான கல்விக்கான ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.
சி.மூ.இராசமாணிக்கம் 1947ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரதிநியாக செயற்பட்டிருந்ததுடன், சுமார் 22 வருட அரசியல் அனுபவத்தினைக் கொண்டு மக்களுக்கான அரும் பணிபணிகளை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது