கொரோனா—சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணுவதில் கிழக்கு மக்கள் கரிசனை

ரீ.எல்.ஜவ்பர்கான்
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள அடையாளம் காணப்பட்டதையடுத்து அரசாங்கமும் சுகாதாரத்துறையும் பிறப்பித்துள்ள சுகாரதார பாதுகாப்பு நடைமுறைகளைகளை சரியான முறையில் பின்பற்றுவதில் கிழக்கு மாகாண மக்கள் மகவும் கரிசனைகாட்டி வருகின்றனர்..
மட்டக்களப்பு மவட்டத்தில் பொது மக்கள் முகக் கவசம் அணிந்து பயணிப்பதையும் சமுக இடைவெளியைப் பேணுவதையும் முக்கிய இடங்களில் கைகழுவுவதையும் மீண்டும் நடைமுறைப் படுத்துவதில் கடும் அக்கறை செலுத்தி வருகின்றனர்.
பஸ்களில் முகக் கவசங்களுடைன் பயணிகள் பயணத்தில் ஈடுபடுவதையும் அரசாங்க அலுவலகங்களில் முகக கவசங்களுடன் கடமையில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது

5 Anhänge