துண்டுப்பிரசுர விநியோக திட்டத்தை ரத்து செய்ய ஐக்கிய மக்கள் சக்தி

0
64

20 வது திருத்தத்திற்கு எதிராக இன்று (05) கோட்டை ரயில் நிலையம் முன் நடைபெறவிருந்த துண்டுப்பிரசுர விநியோக திட்டத்தை ரத்து செய்ய ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டில் தோன்றும் அபாயமே இதற்குக் காரணம் என்று கட்சி தெரிவித்துள்ளது.

அடுத்த வியாழக்கிழமை கொழும்பில் உள்ள ஹைட் பூங்காவில் நடைபெறவிருந்த போராட்டத்தை ரத்து செய்யவும் கட்சி திட்டமிட்டுள்ளது என்பது அறியப்படுகிறது.