சகோதரர் ஏ.சி.எம். கலீலுர்ரஹ்மான் காலமானாதையிட்டு ஊடகம் ஒரு ஆளுமை இழந்து நிற்கிறது

சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல ஊடகவியலாளரும் ,  இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன செய்தி வாசிப்பாளரும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன அறிவிப்பாளரும், இலங்கை துறைமுக அதிகாரசபையின் உத்தியோகத்தாருமான  சகோதரர் ஏ.சி.எம். கலீலுர்ரஹ்மான் கொழும்பில் காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன்) எனும் செய்தி மிகப்பெரும் கவலையை என்னுள் தோற்றுவித்துள்ளது.
அன்னாரின் குரலின் மூலம் நாட்டின் நடப்புகள் அதிகமானவற்றை இந்த நாடு கேட்டறிந்து கொண்டுள்ளது. தனக்கே உரிய பாணியில் சிறந்த முறையில் செய்திகளை நேத்ரா அலைவரிசையில் வாசிக்கும் அவரின் தமிழ் உச்சரிப்பு மிக அழாகானதும் பாராட்டக்கூடியதும். அவரின் நேர்த்தியான ஊடக குரல் இனி எம்மத்தியில் இல்லை என்பது மிகப்பெரும் வருத்தமே.
 அன்னாரின் இழப்பில் துயருட்டிருக்கும் குடும்பத்தார், நண்பர்கள், ஊடக தோழமைகள் எல்லோருக்கும் என்னுடைய ஆறுத்தல்கள்.
என் சகோதரன் ஏ.சி.எம். கலீலுர்ரஹ்மான் அவர்களின் பாவங்கள் சகலதையும் மன்னித்து, அவரின் நல்லதை ஏற்று உயரிய சுவர்க்கம் வழங்கி்டு யா ரஹ்மானே !!
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் (பா.உ)
பிரதி தலைவர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்.