மாணவர்களுக்கு ஆசிவேண்டி பூசை வழிபாடுகள்

?

(படுவான் பாலகன்)  இவ்வருடம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆகிய பொதுப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசிவேண்டி  சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது, கலந்துகொண்டிருந்த மாணவர்கள் அனைவருக்கும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்களினால் எழுதுகோல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை தென்மேற்கு இளைஞர்சேவை உத்தியோகத்தர் தயாசீலன், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்கர் சபையினர் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், இளைஞர்சேவை மாகாணப்பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம், ஏற்பாட்டுக்குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

?
?
?
?
?
?
?