தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அறுவறுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.

ரீ.எல்.ஜவ்பர்கான்–
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் மட்டககளப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ஞானமுத்து.சிறீநேசன் பி.அரியநேத்திரன் உட்பட ஆறுபேரை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதீபதி ஏ.சீ.றிஸ்வான் இன்று விடுதலை செய்தார்.

உண்ணாவிரதமிருந்து மரணமான விதலைப் புலிகள் முக்கியஸ்தர் திலீபனின் நினைவாக அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக  மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாநகர மேயரயும் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  உத்தரவிடப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய மாவட்ட பராளுமன்ற உறுபபினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னாள் பாராளுன்ற உறுபபினர்களான சீ.யாகேஸ்வரன் என்.சிறீநேசன் பி.
அரியநேத்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் மற்றும் முன்னாள் பேராளிகள் கட்சி தலைவர் என்.நகுலன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியபோது இவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுதலை செய்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்திரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.