நீதிஅமைச்சுச்சிற்கு நேர்முகப்பரீட்சைக்கு சென்ற இளைஞர்கள். காத்திருந்த அதிர்ச்சி.

நீதி அமைச்சில் வேலை வழங்குவது என்ற போர்வையில் மோசடிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போலி நேர்காணல் கடிதங்கள் மற்றும் நியமனக் கடிதங்களுடன் ஏராளமான இளைஞர்கள் நீதி அமைச்சகத்திற்கு  சென்றுள்ளனர்..

அந்த நேரத்தில், மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் இன்று (30) பல்வேறு பகுதிகளிலிருந்து வந்ததாக அமைச்சின் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

அவர்கள் அம்பாறை,  நீர்கொழும்பு,  மற்றும்  கொழும்பு போன்ற பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தனர், அவர்கள் அமைச்சுக்கு வந்தபோது நேர்காணல் ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்து கொண்டனர்.

இவர்கள் ரூ .17,500 – 185,000 வரை  பணம் செலுத்தியுள்ளதாகவும், பணம் செலுத்தப்பட்டதாகக் கூறி வங்கி ரசீதுகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணத்தினை வங்கியின் ஊடாக சமந்தா என்ற நபரே பெற்றுள்ளார்.
45 இளைஞர்களிடமிருந்து பணம்  பெற்றுள்ளமை  தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி சி.ஐ.டி.க்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.