உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் மாபெரும் வீதி விழிப்புணர்வு நிகழ்வு

ஏ.எல்.எம்.ஷினாஸ்)     

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் மருதமுனை பிரதேச வைத்தியசாலை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த வீதி விழிப்புணர்வு சைக்கில் ஓட்டம், மெல்லோட்டம் மற்றும் நடைபவணி என்பன  நேற்று(29.09.2020) மருதமுனை தொடக்கம் காரைதீவு வரைக்கும் நடைபெற்றது.

தொற்றா நோய் காரணமாகவே உலகில் அதிகளவில் உயிரழப்புக்கள் நடைபெறுகின்றன. இதற்கு இருதய நோய்கள் பிரதான காரணமாக விளங்குகின்றது. இதிலிருந்து தவிர்ந்து கொள்ள ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களும் சிறந்த உடற்பயிற்சியும் முக்கியமானதாகும். நாளொன்றுக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது கட்டாயமானதாகும். இது போன்ற விழிப்புணர்வுகளை பிரதேச மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்குடன் இந்த வீதி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றன.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ரி.எஸ்.ஆர்.ரி.ரஜாப், மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.ஆர்.எம்.அஸ்மி உட்பட வைத்தியர்கள், அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மருதமுனை ரைடஸ் ஹப் (Riders Hub) சைக்கிலோட்ட கழகம், கல்முனை கார்மல் பற்றிமா கல்லுரி மாணவர்கள் ஆகியோர் வீதி சைக்கிலோட்டம் மற்றும் மெல்லோட்டம் போன்ற விழிப்புணர்வு பயிற்சிகளில் கலந்து கொண்டனர்