அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான கழகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் “விஞ்ஞான கழக அங்குரார்ப்பன” நிகழ்வு திங்கட்கிழமை (28) காலை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக பாடசாலையின் இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் யூ.எல்.ஏ. ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் விஞ்ஞான பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அப்துல் வாஹீட் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், விஞ்ஞான பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலோடு இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.