மாவட்ட  விளையாட்டு  விழாவில் பங்குபற்றவுள்ள  விளையாட்டு வீரர்களுக்கான   குழு  போட்டிகள்

மாவட்ட  விளையாட்டு  விழாவில் பங்குபற்றவுள்ள  விளையாட்டு வீரர்களுக்கான   குழு  போட்டிகள்  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

கிழக்குமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுசரணையில்  கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 2020 ஆண்டுக்கான விளையாட்டு விழா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  நடைபெறவுள்ள நிலையில் விளையாட்டு போட்டிகளில்  பங்குபற்றவுள்ள  விளையாட்டு வீரர்களுக்கிடையிலான  குழு போட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட   மட்டத்தில் நடாத்தப்பட்டு  வருகின்றது .

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் ஒழுங்கமைப்பில்  ஆண் , பெண்  கபடி குழு போட்டிகளும்    , பெண்களுக்கான வலைப்பந்து போட்டிகள்   இன்று மட்டக்களப்பு  வெபர் உள்ளரங்க மைதானத்திலும்  , வெபர் மைதானத்திலும் நடைபெற்றது . இன்று நடைபெற்ற  கபடி,  வலைப்பந்து  குழு போட்டிகளில்  விளையாட்டு வீர வீராங்கனைகள் , பயிற்றுவிப்பாளர் , ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்