நாவற்குடா ஆரையம்பதி பகுதிகளில்12 வீடுகளை உடைத்து 55 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது.

ரீ.எல்.ஜவ்பர்கான்–

12 வீடுகளை உடைத்து 55 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி நாவற்குடா ஆகிய இடங்களிலேயே இவ்வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல.ஆர்.குமாரசிறியின் பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின்  வழிகாட்டலில் பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி கயான் ராஜகருண தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவர்களைக் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து கொள்ளைக்குப் பயன்பத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டவுள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.