மட்டு.தாளங்குடாவில் கைக்குண்டு மீட்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்;-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் சத்தி வாய்ந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

நேற்றுக்கலை 11 மணியளவில் தாளங்குடா இந்து மையானத்திலிருந்து குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி கயான் ராஜகருண தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைக்குண்டைக் கைப்பற்றியதுடன் குண்டு செயலிழக்கும் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.
காத்தான்குடி பொலிசார் தீவர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.