தாபரிப்பு குளப்பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்பாடு மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரியினால் முன்னெடுப்பு.

(சுடர்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள தாபரிப்பு குளப் பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்பாடு இன்று (27) மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

முனைக்காடு முதலைக்குடா கிராமங்களின் பொதுமக்கள், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தின் விசேட திட்டமாக இச்சிரமதானம் இடம்பெற்றமையினை குறிப்பிடலாம்.

மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி Dr.K.ரமேஷ் தலைமையில் இடம் பெற்ற இச்சிரமதானப்பணியில் பொது சுகாதார உத்தியோகத்தர்கள், முனைக்காடு முதலைக்குடா கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றினர்.

இதன்போது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்களுக்கான கருத்துரைகளை சுகாதார வைத்திய அதிகாரி வழங்கினார்.