மட்டக்களப்பில் 5பேருக்கு பொலிசார் விரித்தவலை. நினைவுதினத்தைஅனுஸ்டித்த இளைஞர்கள்

திலீபனின் நினைவேந்தல் தினத்தை நடாத்த முயற்சித்தமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கும் நீதி மன்றத் தடை உத்தரவுப் பிறப்பிக்குப்பட்டுள்ளது.

இதன்படி, மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், முன்னாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அரியேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சி நகுலேஸ் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தடையுத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை

இன்றையதினம் காலை 9.45 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது இடங்களிலும் ஆலயங்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தடைகளையும் தாண்டி, மட்டக்களப்பு இளைஞர்களால் கல்லடி விஸ்ணு ஆலயத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவப்படத்திற்க்கு மலர்தூவி வழிபாட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது.