தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டு அரியத்துக்கு பொலிசார் வழங்கிய ஆவணம்.

கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர ஆலயத்தில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு நடாத்த பா.அரியநேத்திரன் முயற்சிசெய்வதாகக்கூறி நிகழ்வைநடாத்தவேண்டாம் எனக்கூறி கொக்கட்டிச்சோலைப்பொலிசார் நீதிமன்ற தடையுத்தரவொன்றை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளைத்தலைவர் பா.அரியநேத்திரனிடம் கையளித்துள்ளனர்.

இன்று இரவு 10.45மணிக்கு அரியசேத்திரனின் வீடுதேடிச்சென்ற பொலிசார் நீதிமன்ற உத்தரவை கையளித்ததுடன் மேலதிகமாக சனிக்கிழமை காலைமட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஷ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சமூகம் தருமாறு  தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டு அதற்கான ஆவணத்தையும் கையளித்துள்ளனர்.