கிராமசேவையாளர்களுக்கான கடமை நேரங்கள்.

கிராம  சேவகர்கள் தங்கள் பிரிவுகளுக்குள் 24 மணி நேரமும், ஓய்வு நாட்களைத் தவிர 6 நாட்களும் தங்கள் கடமைகளைச் செய்ய கடமைப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்  திணைக்களம் தெரிவித்துள்ளது..

அரசாங்க தகவல்  திணைக்கள பணிப்பாளர் கையெழுத்திட்ட அறிக்கையில் இது 01.10.2020 முதல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது..

செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை. மேலும் சனிக்கிழமைகளில் மதியம் 12.30 மணி வரை பொது சேவைக்காக அவர்களின் அலுவலகங்களில் இருக்க வேண்டும்.

மீதமுள்ள மூன்று நாட்களில் ஒரு நாளை ஒரு நாள் விடுமுறையாகவும், மீதமுள்ள இரண்டு நாட்களை கள கடமைகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..