சுவிஸ் நாட்டில் தமிழ்பெற்றோர் மாணவர்களுக்கான கல்விப்புலம் சார் வழிகாட்டுதல் கருத்தரங்கு:-

0
149

சுவிஸ் நாட்டில் வதியும் தமிழ்பெற்றோர்கள் மாணவர்களுக்கான கல்விப்புலம் சார் வழிகாட்டுத்தல் கருதரங்கு ஒன்று , எதிர்வரும் 26.9.20 சனிக்கிழமை பி.ப 14.00 மணி முதல் 17.00 மணி வரை Forum Hardau, Bullingerstrasse 63, 8005 Zürich என்னுமிடத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வை TaVs என்னும் சுவிஸ் நாட்டில் தமிழ் பல்கலைக்கழக மாணவர் மன்றம் ஒழுங்கு செய்துள்ளது.

அந்த அமைப்பு பல்வேறு செயற்திட்டங்களை சுவிஸ் மற்றும் தாயக தளங்களிலும் செய்து வருகிறது .

அந்தவகையில் கல்விச் செயற்திட்டத்தின் கீழ் மேற்படி வழிகாட்டுதல் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கருதரங்கின் வளவாளராக கல்விப்புலத்தில் பணியாற்றும் தமிழ் நிபுணர்கள், மற்றும் TaVS உறுப்பினர்கள் பணியாற்றவுள்ளனர் .

இக்கருத்தரங்கின் மூலம் , சுவிஸ் நாட்டில் உள்ள கல்விக்கொள்கை , பல்கலைக்கழகங்கள் , உயர்தொழிஙட்ப நிறுவனங்கள் , உயர்கல்விநிறுவனங்கள் , தொழில்கல்விநிறுவனங்கள் , அவற்றுக்கான அனுமதி ,  பாடசாலைக்கல்வி முறைமை , தொழில் முறைமை என பல்வேறு பட்ட விடயப்பரப்புக்களை உள்ளடக்கி வளவாளர்களால் கருத்தரங்கு தமிழ்மொழியிலும் ஜெர்மன் மொழியிலும் நிகழ்ந்தப்படும் . தங்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கான விடைகளும் விளக்கங்களும்  அளிக்கப்படும் .

சுவிஸ் மத்திய அரசால்  பணிக்கப்பட்ட கொரோனா தொடர்பான  விடயங்களை பின்பற்றி நிகழ்வில் பங்கேற்க்குமாறு தமிழ்பேசும் பெற்றோர்கள் மாணவர்களை , தமிழ்பல்கலைக்கழக மாணவர் மன்றம் அழைக்கின்றது .

தாங்கள் kalvi.ch என்னும் இணையத்தின் மூலமாக kalvi ஊடாக முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்  என்பது குறிப்பிடத்தக்கது .