கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி.

கிளிநொச்சியில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் இன்று (21) ரயில் மோதியதில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டதாக கிளிநொச்சி பொலீசார் தெரிவித்தனர்.

இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் மோதியதில்  பரிதாபகரமாகஉயிரிழந்துள்ளார்.

மோதலுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை, ரயிலில் குதித்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டாரா  என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்தவர்  மலையாளபுரத்தில் வசிக்கும் 21 வயது யோகேஸ்வரன் அயந்தன் என அடையாளம் காணப்பட்டதாக  பொலீசார் தெரிவித்தனர்.