திருமலையில் மருத்துவர் க.ஜெயகாந்தராஜா தமிழரசின் பதவிநிலைகளிலிருந்து விலகினார்.

(கதிரவன்)
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை பட்டணமும் சூழலும் கோட்ட செயலாளர் மருத்துவர் க.ஜெயகாந்த ராஜா சுயவிருப்பின் பேரில் கட்சியின் சகல பதவி நிலைகளில் இருந்தும் விலகிக்கொள்வதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  நேற்று 2020.09.21 திங்கட்கிழமை இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலை மாவட்ட தலைவருக்கு இதனை அனுப்பி வைத்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக தான் சுயமாக இந்த பதவி விலகலை மேற்கொண்டதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் ஜெயகாந்த ராஜா கன்னியா வட்டார செயலாளராகவும் திருகோணமலை பட்டினியும் சூழலும் கோட்ட செயலாளராகவும் திருகோணமலை மாவட்ட குழு உறுப்பினராகவும் இலங்கை தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது விடயமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் ஆனா தாசன் அவர்களை தொடர்பு கொண்டபோது மருத்துவ சிகிச்சை காரணமாக கன்னியா கோட்ட செயலாளர் மருத்துவர் விஜயகாந்த ராஜா விலகுவதாகவும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தன்னால் பணிகளை ஆற்ற முடியாது உள்ளதாகவும் தெரிவித்திருப்பதாகவும் கட்சியின் உறுப்பினராக அவர் தொடர்ந்தும் செயல்படுவர் கட்சி உறுப்பினர் நிலையில் இருந்து அவர் விலக வில்லை எனவும் கட்சியினுடைய கோட்ட செயலாளர்

பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர்
மாவட்ட குழு உறுப்பினர் போன்ற பதவி நிலைகளிலிருந்து விலகுவதாகவும் தனக்கு அறிய தந்ததாக திருகோணமலை மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் குகதாசன் தெரிவித்தார்.