உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்து, கொக்கட்டிச்சோலையில் சம்பவம்.

உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (21) காலை கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.