பிராந்தியத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதற்கான கூடுதல் வழிகளைக் கண்டறிய கனடா எதிர்பார்க்கிறது

கனேடிய உயர் ஸ்தானிகர்

மட்டக்களப்பின்சிக்கலான மற்றும் கடினமான வரலாற்றைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதாக  இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்  தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் மட்டக்களப்புக்கு அம்பாறை மாவட்டங்களுக்குச்சென்று  கடந்த சிலநாட்களாக பல அரசியல்வாதிகள்  திணைக்கள தலைவர்கள் என பலருடன் சந்திப்புகளை  மேற்கொண்டிருந்தார்.

 கனேடிய உயர்ஸ்தானிகர் மட்டு அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வேட்பாளர்களிடமிருந்து  தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.

அவர் தனது விஜயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை கனடாஆதரிப்பதாகவும்.கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயம், இந்த பிராந்தியத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதற்கான கூடுதல் வழிகளைக் கண்டறிய கனடா எதிர்பார்க்கிறது என தெரிவித்துள்ளதுடன்

மட்டக்களப்பின் உள்ளூர் மீன்பிடி சமூகம் மற்றும் இளைஞர்களை  மேம்படுத்தவும்சேவலங்கா வழியாக மட்டக்களப்பு களப்பின் சுற்றுப்புறங்களில் சதுப்பு நிலங்களில் மரங்களை நடுகை  செய்வதற்கு ஆதரவளிப்பதில் பெருமைப்படுவதாகவும்  சதுப்புநிலங்கள் நீர்வள ஆதாரங்களை மீட்டெடுக்க உதவுவதுடன் மேலும் அவை சமூகத்திற்கும் மாவட்டத்திற்கும் பயனளிக்கும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்..

  இதேவேளை மட்டக்களப்பின் சிக்கலான மற்றும் கடினமான வரலாற்றைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுடன், முன்னோக்கிச் செல்வதற்கான யோசனைகளும், பலவிதமான முன்னோக்குகளைக் கேட்க வேண்டும்எனவும்
தனது வருகையின் போது தனக்காக நேரம் ஒதுக்க தயாராக இருந்த அனைவருக்கும் உயர் ஸ்தானிகர் நன்றி தெரிவித்துள்ளார்.