கனேடிய தூதுவர் மட்டக்களப்பில் சட்டத்தரணி மங்களாவையும் சந்தித்தார்.

 மட்டக்களப்பு மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் நோக்கும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தல்  உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கனேடிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மெக்கின்னன்( High Commissioner of Canada to Sri Lanka David McKinnon) அவர்களுடனான விசேட சந்திப்பின்போதுஎடுத்துரைத்துள்ளதாக சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் தெரிவித்தார்
தற்போது கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மெக்கின்னன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கிழக்கின் நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்து வருகின்றார்.
அதன் ஒரு கட்டமாக சமுக செயற்பாட்டாளர் மங்கேளேஸ்வரியை சந்தித்தும் கலந்துரையாடிய போது

• பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் நோக்கும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஊக்கிவிக்கும் வகையிலான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தல் .
• எதிர் காலங்களில் அவர்களது அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை முன்னுரிமை படுத்துதல்,
இனங்களுக்கு இடையிலான நல்லுறவு போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கவேண்டியதன் அவசியம்.
• கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் பிரதிநிதிகள் தெரிவு
செய்யப்படாமைக்கான காரணங்கள்
• எதிர் காலங்களில் பெண்கள் பிரதித்துவத்தினை அதிகரிக்க முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.