வனவள நாசகாரச் செயல்கள் பற்றி அறிவிக்க தனியான தொலைபேசி இலக்கம்

(எஸ்.நாகராஜா)

சட்டவிரோதமான முறையில் காட்டுக்குத் தீ வைத்தல், காடழிப்புச் செய்தல், காட்டு விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற செயற்பாடுகளினால் பெறுமதிமிக்க இயற்கை வளங்கள் நாளுக்கு நாள் அழிவை எதிர்நோக்கி வருவதனைத் தடுப்பதற்கான பல்வேறுபட்ட முயற்சிகளையும் வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் காட்டுக்குத் தீ வைத்தல், காடழிப்புச் செய்தல், காட்டு விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கக்கூடிய வகையில் 1992 என்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக யாரும் நபர்கள் வன வளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது பற்றி அறிந்தால் உடனடியாக இத்தொலைபேசிஎண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி அதுபற்றிய தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.