எம்.ஏ.எல்.எம்  ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியுள்ளார்.

கிழக்குமாகாணசபையில் எம்.ஏ.எல்.எம்  ஹிஸ்புல்லா செயற்பட்டகாலப்பகுதியில் கிழக்கில் உள்ள தீவிரவாதஅமைப்புக்குகளுக்கு ஆயுதம் வழங்கியதாக முன்னாள்பிரதிபொலிஸ்மா அதிபர் எடிசன் குணசேகர உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணைசெய்யும் ஆணைக்குழுமுன் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிஸ்புல்லாவின் சக்தி காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் அவரது நடவடிக்கைகள் குறித்து புகார் கூற அஞ்சுகிறார்கள் என்றும்

கிழக்கு மாகாணத்தில் செயல்படும் தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்களை கைது செய்வதை ஹிஸ்புல்லா, அதாவுல்லா நசீர் அலி மற்றும் பதியுதீன் போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் எதிர்த்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.