வடக்கில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைக்க முயற்சி.

வடமாகாணத்தில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு வடக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான விவாதத்தைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பலருடன கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஈ.பி.டி.பி. அமைப்பின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏனைய கட்சிகளுடன் இணைய மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

மற்ற கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து இந்த அமைப்பை முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைப்பின்  செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.