மருதம் கலைக்கூடல் மன்றத்தின் “குடும்ப குதூகலம்” கலை நிகழ்வுகளும் கொண்டாட்ட நிகழ்வும்

 நூருள் ஹுதா உமர்.
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 06 ஆம் ஆண்டை முன்னிட்டு கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் நடைபெற்ற “குடும்ப குதூகலம்” கலைநிகழ்வுகளும் கொண்டாட்டமும் சனிக்கிழமை (12) மாலை மாளிகைக்காடு பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேசத்தின் புகழ்பெற்ற கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு ஆடல், பாடல், நடிப்பு, கவிதை, இலக்கியம் என தமது முழுத்திறமைகளையும் வெளிக்காட்டினர்.
இந்நிகழ்வில் சட்டம், ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ. எம்.ரிம்ஸான், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளரும் மீஸான் பௌண்டசனின் தவிசாளருமான நூருள் ஹுதா உமர், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்ரப், வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை பிராந்திய காரியாலய பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சி.எம்.நிஸார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.