தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 11 இலட்சம் பெறுமதியான தங்கத் தாலியை கத்தியைவைத்து பறித்தெடுத்த திருடன் தப்பியோட்டம்– ——

அதிகாலை ஆரையம்பதியில சம்பவம்

ரீ.எல்.ஜவ்பர்கான்–
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கத்தாலியை கத்தியை வைத்து பறித்தெடுத்த திருடன் தப்பிச்சென்ற சம்பவம் இன்று(12) அதிகாலை 4 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்

ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள பாடசாலை ஆசிரியையான பெண் தனது வீட்டில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அதிகாலை 4 மணியளவில் படுக்கையறைக்குள் நுழைந்த திருடன் குறித்த பெணணின் கழுத்தில் கத்தியை வைத்து மாலையை பறித்த போது அப்பெண் கூச்சலிடவே மாலையை பறித்தெடுத்துக்கொண்டு தப்பியோடியதுடன் வீட்டின் பிரதான கதவுக்கு முன்னால் பூட்டையும் போட்டு விட்டுச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சுமார் 11 பவுண் எடையுள்ள தாலியின் பெறுமதி 11 இலட்சத்திற்கும் அதிகமென வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.