கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய கணக்காளர் நியமனம்

யூ.கே. காலித்தீன்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராக இருந்து  வருடாந்த இடமாற்றத்தை
பெற்ற ஐ.எம்.பாரிஸ் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார்.

அவரின் இடத்திற்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றிய எம்.எம்.உஸைனா பாரிஸ் அவர்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய கணக்காளராக கடமையைப் பொறுப்பேற்றார்.
இவர் தனது பட்டப்படிப்பை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதல் தரத்தில் சித்தியடைந்து, அங்கேயே இரண்டு வருடங்கள் பகுதிநேர விரிவுரையாளராகவும், பின்னர் சம்மாந்துறை (SLIATE)ல் இரண்டு வருடங்கள் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இந்திய காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிருவாகத்தில் முதுமானிப் பட்டம் பெற்று, 2005 ஆம் ஆண்டில் கணக்காளராக தனது முதல் நியமனத்தை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பெற்று பல வருடங்களின் பின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.
இப்பிராந்தியத்தில் இருக்கின்ற சிரேஷ்டமான முதலாம் தர கணக்காளர்களில் இவரும் ஒருவராவார்.
ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, ஆண்களே தயக்கம் காட்டக்கூடிய கணக்காளர் பதவியில் சிறப்பாக இயங்கி நிறுவனத் தலைவர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இவர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலும் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையை தருவதாக பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே. சுகுணன் கடமையைப் பொறுப்பேற்கும் போது தெரிவித்தார்.
இவர், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் இடமாற்றம் பெற்றுச் சென்ற முன்னாள் கணக்காளர் ஐ.எம்.பாரிஸின் பாரியார் என்பது குறிப்பிடத்தக்கது.