மட்டக்களப்பில் சிறுவர்களுக்கான சிறுவர் பூங்காக்கள் அழகுபடுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு

சிறுவர் சினேக நகரமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான சிறுவர் பூங்காக்கள் அழகுபடுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சிறுவர் சினேக நகரமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதன் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையுடன் தன்னார்வ தொண்டு நிறுவனமான யுனிசெப் மற்றும் ஜெரி நிறுவனங்களின் நிதி பங்களிப்புடன் நகரை அழகு படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .

அந்த வகையில் மட்டக்களப்பு வாவிக்கரை லகூன் பாக்  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் சிறுவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா சிறுவர்களுக்கான விளையாட்டு அரை மற்றும் காந்தி பூங்காவில் வரையப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு ஓவியங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் இதன்னார்வ தொண்டு நிறுவனங்களான யுனிசெப் மற்றும் ஜெரி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இமட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்