81 வயது முதியவர் தூக்கில் தொங்கி தற்கொலை

 மட்டுமாறன்
மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் 81 வயது முதியவர் ஒருவர் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் (08) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

சித்தாண்டி பிரதான வீதியைச் சோந்த 81 வயதுடைய பிள்ளையான் விஸ்வநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரின் உறவினர்கள் சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டில் இல்லாத நிலையில் தனிமையில் இருந்த  முதியவர் வீட்டின் அறையிலன் கூரையில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இத தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்